Teaser

The Bed – Official Tamil Teaser !

Published

on

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’(The Bed).

ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் புகழ் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கோகுல், படத் தொகுப்பு – ஜே.பி., இசை – தாஜ்நூர், பாடல்கள் – யுகபாரதி, கலை இயக்கம் – பழனிவேல், சண்டை இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், புகைப்படங்கள் – ராஜ் பிரபு, நிர்வாகத் தயாரிப்பாளர் – A.V. பழனிச்சாமி, தயாரிப்பாளர் – வி விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ், மக்கள் தொடர்பு – A.ஜான்.

‘வெத்து வேட்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும், அதைத் தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படத்தின் கதை.

இன்று இப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version