News
எஸ்.ஜே.சூர்யா மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது !

தன் மீதான வருமான வரி தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறையினர் சார்பில் 6 வழக்குகளை தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது வருமான வரி கணக்குக்கான மருமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால் வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.ஜே.சூர்யா சார்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எஸ்.ஜே.சூர்யா வருமான வரி கணக்கை செய்யாததால் வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றன் உத்தரவிட்டுள்ளது.