News

அயலான் படத்தை திரையிட இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம் !

Published

on

இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். வேற்றுக்கிரகவாசி தொடர்பான கதைக்களம் கொண்ட திரைப்படம். படப்பிடிப்பு முழுவதுமாக நடைபெற்று முடிந்து தற்போது வெளியீட்டு பணிகள் நடந்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 24 ஏ.எம் ஸ்டுயோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஜேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அயலான் படத்தை வெளியிட தடை கோரி சென்னை ஜகோட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் 24 ஏ.எம் நிறுவனம் தங்களிடம் பெற்ற 5 கோடி கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 6 கோடியே 92 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தரவேண்டியுள்ளது. அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ இல்லை விநியோகம் செய்யவோ கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அயலான் படத்தை ஜனவரி 3 வரை வெளியிட இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம். அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 3-ம் தேதி தள்ளி வைத்தது ஜகோர்ட் உத்தரவு.

Trending

Exit mobile version