News

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இறுதி சண்டைக்காட்சியில் மாற்றம் !

Published

on

அஜித் நடித்து வரும் வலிமை படம் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் அலையால் பாதித்து இருந்த வலிமை திரைப்படம் ஒரு வழியாக அது முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்து ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். அங்கு அஜித் மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கியபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதை கூட பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை நடத்திக்கொடுத்தார் அஜித் காரணம் விரைவில் படத்தை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில்.

படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சியை சுவிட்சர்லாந்த்தில் தொழி நுட்ப நிபுணர்களை வைத்து படமாக்க இயக்குனர் எச் வினோத் திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே எடுத்த ஒரு சில காட்சிகளில் லேசான மாற்றம் செய்து மீண்டும் படமாக்கவும் விரும்பினர் படக்குழு.

இந்த சண்டைக்காட்சியை எடுத்தால் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று இருந்த படக்குழுவினருக்கு இடியாய் வந்ததுதான் இந்த கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு.

மறுபடப்பிடிப்புக்கான காட்சிகளை எடுக்கவும் கொரோனா விதிமுறைகளால் அனுமதி கிடைக்கவில்லையாம். எனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய காட்சிகளை டெல்லி மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் படமாக்கலாம என்று படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

Trending

Exit mobile version