Connect with us
 

News

வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்த மலையால பிரபல நடிகர் !

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முக்கியமான சில காட்சிகளை மும்பையில் படமாக்கினர் படக்குழு.

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் ஒருவர் தற்போது இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நீரவ் மாதவ் என்ற மலையாள நடிகர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இவரின் இந்த கதாப்பாத்திரம் இப்படத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஜசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.