Connect with us
 

News

தளபதியின் பீஸ்ட் டிரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். ஏப்ரல் 13-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று நேற்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து.

இந்த நிலையில் இன்று மாலை 6:30 மணிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதன் படி ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகிறது.

இதை தவிர ஏப்ரல் 10-ம் தேதி இந்த படத்திக்காக விஜய் அளித்துள்ள சிறப்பு பேட்டி சன் டீவியில் ஒளிப்பரப்பு ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.