News

அடுத்த மாதம் ஆரம்பமாகும் D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு !

Published

on

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் டி43. மாளவிகா மோகனன் இப்படத்தில் ஜோடியாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நடித்திக்கொண்டிருந்த போதுதான் தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றார். தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் புரெமோஷனுக்கு கூட தனுஷ் வரவில்லையாம் அவ்வளவு பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது தி கிரே மேன் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் விரைவில் இந்தியா வரவிருக்கிறார் தனுஷ்.

தற்போது தனுஷ் நடிக்கும் டி43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சற்று முன்னர் அறிவித்தது. அதில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டது அதில் தனுஷ் மாஸ்க் அணிந்துதிருப்பது போன்று உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 20 தேதியிலிருந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version