News

ஆரம்பமானது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு !

Published

on

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 50 கோடி என்றுதான் படத்தை ஆரம்பித்தனர் ஆனால் தற்போது படத்தின் செலவு 68 கோடியை எட்டியுள்ளது. இருந்தாலும் படம் இன்னும் முடிந்த பாடுல்லை.

படத்தை முடிக்க மீதமுள்ள காட்சிகளை படமாக்க இன்னுமே 10 கோடி வரை செலவாகலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலும் கோபத்திலும் உள்ளாராம். இதனால்தான் கோப்ரா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது மகான் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு தயாராகியுள்ளது. தற்போது மீண்டும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் தயாரிப்பாளர் லலித். தற்போது நடக்கும் இந்த படப்பிடிப்போடு கோப்ரா படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெருகிறதாம்.

Trending

Exit mobile version