News

வெளியானது D43 பர்ஸ்ட் கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள் !

Published

on

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த D43 படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் இன்று தனுஷ் பிறந்த நாளில் வெளியாகும் என அறிவித்திருந்தது. இன்று சற்று முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. அதன் படி தனுஷ் நடிக்கும் 43-வது படத்தின் டைட்டில் மாறன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டைட்டில் போஸ்டரில் தனுஷ் கோபத்துடன் யாரோ ஒருத்தை கொடூரமாக அடிப்பது போன்ற அந்த போஸ்டரில் உள்ளது.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் முடித்து விட்டதாகவும் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version