Connect with us
 

News

என் மகனுக்கு காண்பிக்கும் முதல் திரைப்படம் துப்பாக்கி – காஜல் அகர்வால் !

Published

on

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படத்தில் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்து வருகிறார். இதை தவிர இவர் நடிப்பில் மார்ச் 17-ம் தேதி வெளியாகவுள்ள மற்றுமொரு திரைப்படம் கோஸ்டி.

இந்த நிலையில் அண்மையில் இவர் அளித்த ஒர் பேட்டியில் என் மகனை அவனின் 8 வயது வரைக்கும் திரைப்படங்கள் பார்ப்பதையோ அல்லது செல்போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை நான் அனுமதிக்கப்போவதில்லை. அவனின் 8 வயதுக்கு பின்னர் திரைப்படங்களை பார்ப்பதற்கு அனுமதிப்பேன். அப்படி என் மகனுக்கு நான் காண்பிக்கும் முதல் திரைப்படம் விஜய்யுடன் நான் இணைந்து நடித்த துப்பாக்கி திரைப்படமாகத்தான் இருக்கும். இத்திரைப்படம் என் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக எனக்கு அமைந்தது அதனால் எனக்கு அப்படத்தை அதிகம் பிடிக்கும் என கூறியுள்ளார்.

2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.