Connect with us
 

Teaser

அனல் பறக்கும் கோட் முன்னோட்ட வீடியோ வெளியானது !

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த, மோகன், ஸ்னேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு விஜய்யின் தோற்றம் இளமையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் டி ஏஜிங் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இன்று விஜய் பிறந்த நாள் என்பதால் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக படத்தின் ஒரு சிறு டீசரை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு வேடங்களில் இருக்கும் விஜய் இரு. சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது போல ஒரு சண்டைக்காட்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு விஜய் வயதான கெட்டப்பிலும் இன்னொரு விஜய் மிக இளமையான கெட்டப்பிலும் இருக்கிறார்கள்.