Reviews
The Greatest Of All Time – விமர்சனம் !
Cast: ‘தளபதி’ விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி,
Production: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் (பி) லிட்
Director: வெங்கட் பிரபு
Screenplay: வெங்கட் பிரபு
Cinematography: சித்தார்த்தா நுனி
Editing: வெங்கட் ராஜன்
Music: யுவன் ஷங்கர் ராஜா
Runtime: 3H 3Mins
Release Date: 5 September 2024
தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுதும் வெளியாகியிருகிறது The Greatest Of All Time திரைப்படம். இப்படம் உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் விஜய் , அஜய் , பிரசாந்த், பிரபு தேவா ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதியான மோகன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள்.
இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி சினேகாவுடன் செல்லும் காந்தி (விஜய்), தன்னுடைய மகனை பறி கொடுக்கிறார். ஆனால் பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்த பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக ஜீவன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.
நீண்ட நாட்களாக சீரியஸாகவே திரையில் தோன்றி வந்த விஜய்க்கு அவரின் எல்லா வித பக்கங்களையும் காட்ட தளம் அமைத்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன் படி படத்தில் விஜய் வெளிப்படுத்தி இருக்கும் காமெடி, லூட்டி, எமோஷன், சைலண்ட் ரியாக்ஷன், டயலாக் டெலிவரி, ஆக்ஷன் என அனைத்தும் ரசிக்க வைத்து இருக்கிறது.
குறிப்பாக அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் புதுமையாக இருக்கிறது. டி ஏஜிங் செய்யப்பட்ட விஜயின் கரெக்ஷன் ஓகே ரகம்தான். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் விஜய் வெளிப்படுத்திய நடிப்பு மிரட்டல்.
சினேகா முடிந்த அளவு எமோஷனை கடத்த முயன்று கவனம் இருந்தாலும், அந்த இடம் கூட மீனாட்சிக்கு இல்லை..பால் வடியும் மோகனின் முகத்தில் வில்லனிசம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆக வில்லை. பிற எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்காமல் போனது சோகத்திலும் பெரும் சோகம்.
படத்தின் பெரும் பலவீனாக முன்னமே சோசியல் மீடியாவில் நிலவிய படத்தின் சஸ்பென்ஸ்கள் சார்ந்த தகவல்கள் மாறி இருக்கின்றன. காரணம், அவை அனைத்தும் படத்தில் அப்படியே இருக்கின்றன. அதனால், அடுத்து வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ஆர்ப்பரிப்பை கொடுக்க வில்லை. அதே போல படத்தில் ஜீவன் வில்லனாக மாறுவதற்கு சொல்லப்பட்ட காரணம் படத்தின் சுவாரசியத்தை ஒட்டு மொத்தமாக குறைத்து விட்டது.
ஸ்கெட்ச் போட்டு அப்பா – மகன் கான்ஃபிளிக்ட்டை திரைக்கதையில் வைத்து விளையாட நினைத்த வெங்கட், சண்டையில் அசைவுகளை வைத்தே அவன் ஜீவன் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்ததை, அவ்வளவு திறமை வாய்ந்த காந்தி கண்டுபிடிக்க மாட்டார் என்று நினைத்தது எப்படி என்று சுத்தமாக புரியவில்லை.
படத்தின் ஆகப்பெரிய பலவீனம் யுவனின் பின்னணி இசை. ஆம், முதல் பாதியில் அவரின் பின்னணி இசை காட்சிகளின் உயிர்ப்பை கடத்த பெரிதாக உதவவில்லை. இரண்டாம் பாதியில் ஏதோ கொஞ்சம் முயன்று இருக்கிறார்.
ஓப்பனிங் பாடலில் கரெக்ஷன், மெலடி பாடலுக்கு பதிலாக இளையராஜா பாடல், பின்னணி இசையில் முத்திரை பதித்து படத்திற்கு பலம் சேர்க்காமல் போனது உள்ளிட்டவை யுவன் இந்த வாய்ப்பை அலட்சிய போக்குடன் கையாண்டு இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
படத்தின் திரைக்கதை சுவாரசியமாக இருந்த போதிலும் வெங்கட் பிரபு படங்களில் கதையில் காணப்பட்ட அழுத்தம் இல்லாமல் போனது சற்று வருத்தம். கிளைமாக்சில் ஐபில் மேட்சையும், திரைக்கதையையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து கதை நகர்த்திய விதம் அசத்தல்.
Rating 4/5