News
இந்தியன் 2 பிரச்சனையை முடிக்க மத்தியஸ்தரை நியமித்தது உயர் நீதிமன்றம் !
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள். பல தடைகள் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா என படம் முடிந்த பாடுல்லை. இதனால் இதை விட்டுவிட்டு வேறு படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தினார் இயக்குனர் ஷங்கர்.
இதனால் மிகவும் கோபமடைந்த தயாரிப்பு நிறுவனமான லைகா எங்களின் படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்க தடை விதிக்ககோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த பிரச்சனையை இரு தரப்பினரும் பேசி தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறித்தியது நீதிமன்றம். இதனையடுத்து இருவரும் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் இடையேயுள்ள பிரச்சினைக்கு தீர்வு கான உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் இவர்களில் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.