News

இந்த வயதில் இப்படம் செய்யும்  ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது – கமல்ஹாசன் !

Published

on

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.இதில் கலந்து கொண்டு பேசிய உலகநாயகன் கமல்ஹாசன்.

‘இந்த வயதில் இப்படம் செய்யும்  ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது. எல்லா கலைஞர்களும் தந்த ஊக்கம் தான் என்னை இயக்கியது. நேர்மறை விசயங்கள் தாண்டி, இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் போய்ச்சேருமா? எனத் தயக்கம் இருந்தது, ஆனால் இப்போது அது சேரப்போகிறது என்பது மகிழ்ச்சி.

உடன் பணிபுரிந்தவர்கள் பலர் இப்போது இல்லை, இப்படிப் பல நிகழ்வுகளைத் தாண்டித்தான் இந்தப்படம் இங்கு வந்துள்ளது. இப்போது எல்லோரும் நன்றாக  இருப்பதாகச் சொல்வது  மகிழ்ச்சி. சென்சாரில் படம் பிடித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அது இன்னும் மகிழ்ச்சி. இந்தியன் படம் எடுக்கும்போது, அது தான் அதிக பட்ஜெட் அது ஒரு குறையாகக் கூடச் சொல்லப்பட்டது, ஆனால் இப்போது இந்தப்படத்துடன் ஒப்பட்டால் அது ஒன்றுமே இல்லை. இப்படத்தை அத்தனை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். அத்தனை கலைஞர்களும், நட்சத்திரங்களும் முழு உற்சாகத்துடனும், உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளனர்.

விவேக் சொன்னது இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உழைப்பு அத்தனையும் நம்புகிறேன் நான். இந்தியன் தாத்தா உபயோகிக்கும் பேனா, உடை என அத்தனையையும், அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே ஒகே சொல்வார் இயக்குநர். கனவில் நினைத்துக் கொண்டிருந்ததை எல்லாம் நிஜமாக்கி காட்டியிருக்கிறார். இந்தியன் என்றால் என்ன தாத்தா வருவார், ஷங்கர் படமென்றால் பிரம்மாண்டம் பாட்டு நல்லாருக்கும் என எளிதாகச் சொல்லிவிடுவார்கள், ஆனால் அது அத்தனை எளிதல்ல, இரண்டாம் பாகம் எனும் போது, நானே அதைத்தான் சொன்னேன், இதே கேள்வி எனக்கும் இருந்தது. ஆனால் அதைத்தாண்டி மிகச்சிறப்பாகத் திரைக்கதை அமைத்துள்ளார் ஷங்கர். ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய நிறைய வைத்துள்ளார். படம் உங்கள் அனைவரையும் அசத்தும்’.

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2 எனவும் மற்றும் தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியிடப்படுகிறது.

 

Trending

Exit mobile version