News
வரி விலக்கு கேட்க சூர்யாவுக்கு உரிமை இல்லை என கூறிய நீதிபதி !
சூர்யா கடந்த 2007-8 மற்றும் 2008-9 ஆகிய ஆண்டுகளுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் சூர்யா தரப்பிலும் வருமானவரி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நடிகர் சூர்யா 3 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தார்.
தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்ட்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால் வருமான வரி சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கையை 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார் சூர்யா.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் சூர்யா மிகவும் தாமதமாக தாக்கல் செய்துள்ளார். வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. சோதனைக்கு பின்னர் வருமா வரி குறித்த முழு விபரங்களையும் அளிக்கவில்லை அதனால் வருமான வரி சட்டப்படி சூர்யாவுக்கு விலக்கு பெற எந்தவொரு உரிமையும் இல்லை என்று கூரியா நீதிபதி சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.