News

ஹாரிஷ் ஜெயராஜின் தெறிக்கும் இசையில் வெளியான தி லெஜண்ட் மோஷன் போஸ்டர் !

Published

on

தனது கடை விளம்பரங்களையே மிக ஆரம்பரமாக தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகைகளை வைத்து விளம்பரம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அவர்கள். இவர் தற்போது நடிகராக இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார். வைரமுத்து, கபிலன், பா.விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர்.

சரவணனுக்கு ஜோடியாக ‘ரித்திகா திவாரி’ என்ற நடிகை நடித்துள்ளார். மறைந்த நடிகரான விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறர்கள்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனிக்க. அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணி புரிந்துள்ளார்.

நடன இயக்குநர்களாக ராஜூ சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் பணி புரிந்துள்ளனர். இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஹாரிஷ் ஜெயராஜின் தெறிக்க விடும் இசையுடன் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version