News

அஜித் 61 படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயர் வெளியீடு !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின்னர் அஜித் எச்.வினோத் மீண்டும் இணைந்துள்ள படம் வலிமை. ஜோடியாக கியூமா குரோசி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முடங்கியுள்ளது. வெளிநாடு சென்று இதை படமாக்குவதற்கு பதிலாக அந்த காட்சிகளை மும்பை, டெல்லியில் படமாக்கலாமா என்று படக்குழு யோசித்து வருகிறார்கள். வலைமை திரைப்படம் தீபாவளி திருநாளில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் வலிமை படத்துக்கு பின்னர் அஜித்குமார் நடிக்கும் 61-வது படத்தையும் இயக்கும் எச்.வினோத் அவர்களே இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது கிடைத்த தகவலின் படி இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இவர்கள் இணையவுள்ளார். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கவும் உள்ளாராம். புதிய படத்தின் முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் அதாவது 2 அல்லது 3 மாதங்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version