Connect with us
 

News

கோவையில் விக்ரம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு !

Published

on

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்துள்ள திரைப்படம் விக்ரம்.

கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இப்படத்தில் முழு வேகத்துடன் செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 17-ம் தேதி முதல் கோவையில் தொடங்கவுள்ளது என கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.