News
மார்ச் இரண்டாம் வாரத்தில் ஏகே 62 அதிகாரபூர்வ அறிவிப்பு !

அஜித் நடிக்கும் 62-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அனிருத் இசையமைக்கவிருந்த இப்படம் கடைசி நேரத்தில் விக்னேஷ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் இப்போது மகிழ் திருமேனி விறுவிறுப்பாக செய்து வருகிறார். மார்ச் இரண்டாம் வாரத்தில் படத்தின் அப்டேட் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று அஜித் 62 படத்துக்கான அலுவலக பூஜை எளிமையாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.