Connect with us
 

News

சூப்பர் ஸ்டார் தற்போது யாரிடம் உள்ளது அவர்தான் சூப்பர் ஸ்டார் – மோகன் !

Published

on

சூப்பர் ஸ்டார் இந்த படத்துக்கு பல நடிகர்கள் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமா. ஆனலும் தற்போதைய சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் என்று பேசி வருகிறார்கள்.

சமீபத்தில் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார் சூர்யவம்சம் படத்தின் 175-வது நாள் விழாவில் பேசும் போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறினேன்.

அப்போது அதை கேட்ட கலைஞரே வியந்தார். இப்போது விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவ்வாறு நான் அன்று சொன்னது பலித்து விட்டது என கூறினார். சரத்குமாரின் இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களை கடும் கோபமாக்கியது.

சரத்குமாரின் இந்த பேச்சுக்கு பலரு தங்களின் கருத்தை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மோகனிடம் இது பற்றி கேட்ட போது இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அப்போது இருந்து இப்போது வரை போட்டி உள்ளது. பல ஸ்டார்கள் இருக்கலாம். ஆனால் பட்டம் யாரிடமோ உள்ளதோ அவர்தான் சூப்பர் ஸ்டார் அது தற்போது ரஜினி சாரிடம்தான் உள்ளது எனக் கூறினார்.