News

தேசிய விருதை குறி வைக்கும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் !

Published

on

வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் படங்களை தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இவர் 6 தேசிய விருதுகளை பெற்றவர். இருவரும் உதயம், காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை ஆகிய படங்களுக்காக பல விருதுகளை பெற்ற வெற்றிமாறனும் இணைந்து அதிகாரம் என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை திரைக்கதை வசனத்தை வெற்றிமாறன் எழுதியிருக்கிறார். இருவரும் பத்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்து பணிபுருகிறார்கள்.

கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இதற்கு முன்னர் இவரின் இயக்கத்தில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கியவர்.

தேசிய விருதை குறிவைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்படுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் மலேசியாவில் நடைத்தவுள்ளனர்.

Trending

Exit mobile version