News
இரண்டு நாயகிகளுடன் முதல் படத்தின் பூஜை இன்று ஆரம்பம் !

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பிடித்த நாயகனாக மாறினார் அஸ்வின்.தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிரார் நடிகர் அஷ்வின்.
இயக்குநர் ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் பல விளம்பர படங்களை இயக்கியுள்ளார். காமெடி வேடத்தில் புகழ் நடிக்கிறார். விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன் செய்யவுள்ளார்.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம் காமெடி, காதல் கலந்து உருவாகவுள்ளது. இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக தேஜூ அஸ்வினொ மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக நடிகைகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
நடிகை தேஜூ அஸ்வினி சமீபத்தில் வெளியான அஸ்க் மாரோ என்கிற ஆல்பம் பாடலில் கவினுக்கு ஜோடியாக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது படப்பிடிப்பு வரும் 19-ம் தேதி ஆரம்பிக்கவுள்ளது.