Connect with us
 

News

பாகுபலி 2 சாதனையை முறியடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் !

Published

on

பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கபட்ட ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். முதன் முறையாக இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகை ஆலியா பட், நடிகர் அஜய்தேவ்கன், ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ.257 கோடி வசூல் செய்துள்ளதாக இத்திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் ரூ.120 கோடியும் கர் நாடகாவில் ரூ16 கோடியும் தமிழகத்தில் ரூ.12 கோடியும் கேரளாவில் ரூ.4 கோடியும் வெளிநாடிகளில் ரூ.78 கோடியும் வசூலாகி உள்ளது.

இதற்கு முன்னர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் முதல் நாளில் ரூ.217 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. தன்னுடைய சாதனையை ராஜமவுலி இப்போது தானே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது