News

உருவாகிறது டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகம் !

Published

on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய முதல் திரைப்படம் ‘டிமாண்ட்டி காலணி. தமிழ் சினிமாவில் பேய் படங்களின் வருடமாக இருந்த காலகட்டத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம்.

மிக மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் குறிப்பாக இப்படத்தின் அதிகமான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளவே எடுக்கப்பட்டிருக்கும் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி படமாகவும் நல்ல வசூல் படமாகவும் அமைந்தது.

முதல் படமே இயக்குநர் அஜய் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற பெருமையை கொடுத்தது. தற்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘டிமாண்டி காலணி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாகத்திலும் அருள்நிதியே நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு அஜய் ஞானமுத்து வெறும் திரைக்கதை மட்டுமே எழுத உள்ளதாகவும் இயக்குநர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது அதே சமயம் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version