News
உருவாகிறது ஆர்யா நடிப்பில் டெடி படத்தின் இரண்டாம் பாகம் !
தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் தயாராகிவருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன், கமல் நடித்த விஸ்வரூபம், அஜித் நடித்த பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
சூர்யாவின் சிங்கம் படம் இதுவரையில் 3 பாகங்கள் வந்துள்ளன. கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. சுந்தர்.சியின் அரண்மை பேய் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி தற்போது 3-ம் பாகம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ஆர்யா நடித்து வெளியான டெடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. டெடி படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆர்யா, சாயிஷா ஜோடியாக நடித்து இருந்த இப்படத்தை டிக்டிக்டிக் மற்றும் மிருதன் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் இயக்கிவிருந்தார். குழந்தைகளை படம் கவர்ந்ததால் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் டெடி படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதை ஆர்யா அண்மையில் உறுதி செய்தார்.