Connect with us
 

News

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரம் !

Published

on

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12-ம்தேதி வெளியான திரைப்படம் டான். சிவகார்த்திகேயன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது.

இப்படத்தின் 25-வது நாள் வெற்றி கொண்டாட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் டான் படம் வெற்றியடைந்தற்கு வாழ்த்துக்கள். மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்தது நான்தான் ஆனால் அதில் சில காட்சிகள் எனக்கு செட் ஆகாது என்பதால் இதை வேண்டாம் என்று மறுத்தேன் என்றும் கூறினார்.

மேலும் பேசிய உதயநிதி கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திரைப்படமான இந்தியந்2 வேலைகள் விரைவில் ஆரம்பமாவது உறுதி என்று தெரிவித்தார்.

இந்த செய்தியை கேட்ட கமல்ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கமல் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.