News
ஆரம்பமானது தளபதி 67 படப்பிடிப்பு மனோ பாலா போட்ட பதிவால் பரபரப்பு !

தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பம்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கன்கராஜ். இவர் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் மீண்டும் கூட்டணியில் நடிகை த்ரிஷா, ப்ரியா ஆனந்த் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ஹங்க் சஞ்சய் தத் முதன் முறையாக கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதே போல் கேங்ஸ்டராக அமையும் படத்தில் விஷால், மகேந்திர தோனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் காஷ்மீரில் எடுக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் படத்திற்கான பூஜை வேலைகள் சில நாட்களுக்கு முன் நடைப்பெற்றது.
இதற்கிடையில் ஹூட்டிங் வேலைகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருந்து வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனரும், நடிகருமான மனோ பாலா டுவிட் ஒன்றை செய்துள்ளார்.
அதில் தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக பதிவிட்டுள்ளார். மேலும், படத்திற்கான டீசர் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனோபாலா அடுத்த சில நேரங்களில் அவர் பதிவிட்ட பதிவை நீக்கி விட்டு எனக்கு மன்னிப்பு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.