Connect with us
 

News

இணையத்தை கலக்கும் தளபதி 65 படத்தின் தலைப்பு டார்கெட்?

Published

on

விஜய் மாஸ்டர் படத்துக்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சம்பள பிரச்சனை காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதனால் அந்த வாய்ப்பு இயக்குனர் திலீப் குமார் பக்கம் சென்றது. இவருக்கு இதற்கு முன்னர் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படமான டாக்டர் படங்களின் இயக்குனர்.

இது தளபதி விஜய் அவர்களுக்கு 65-வது படமாகும். விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டெ நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. கொரோனா இரண்டாம் அலை குறைந்த பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.

பெயர் வைக்கப்படாத இப்படத்துக்கு தளபதி 65 என்று தற்காலிய பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில்தான் இந்த படத்துக்கு டார்கெட் என்ற தலைப்பை வைத்துள்ள போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தலைப்பு உண்மை என நம்பி பலரும் வைரலாக்கி வருகிறார்கள்.

ஆனாலும் படக்குழுவினர் டார்கெட் தலைப்பு உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தவில்லை. விஜய்யின் பிறந்த நாளையெட்டி வரும் 22-ம் தேதி படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.