News
அயலான் வெளியீட்டு தேதியில் எந்த மாற்றமும் இல்லை !

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளாக தயாராகி வரும் திரைப்படம் அயலான். மூன்று மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்துள்ளார் குறிப்பாக வேற்றுகிரக மனிதர் ஒரு வேடம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படம் வருகிற தீபாவளி திருநாளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் கிராபிக்ஸ் காட்சிகள் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளதால் இப்படம் தீபாவளிக்கு வெளியாவதில் தாமதம் ஏற்படும் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.
இந்த தகவலை இயக்குநர் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. அயலான் திரைப்படம் திட்டமிட்டப்படி வேலைகள் நடைபெற்று வருகிறது எனவும் கண்டிப்பாக இப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கும் வரும் என உறுதியாக கூறியுள்ளார்.