News

படத்திலிருந்து வலுக்கட்டாயமாக என்னை நீக்கினார்கள் – மகிமா நம்பியார் !

Published

on

மகிமா நம்பியார் தமிழில் வெளியான சாட்டை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல வெற்றி தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் சினிமாவில் தனக்கு நடந்த அவமானங்களை பற்றி பேசியுள்ளார். ‘ நடிகைகள் சினிமா திரையில் இப்போது மட்டுமல்ல நீண்ட காலமாக பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்கள்.

அதிலும் பலர் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சொல்ல முன்வருவதில்லை. எனக்கு அப்பிடித்தான் ஒன்று நடந்தது பிரபல தெலுங்கு முன்னணி ஹீரோ படத்தில் நான்கு நாட்கள் நடித்தேன். அதன் பின்னர் பிறகு கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குள் அறிவித்தார்கள்.

அப்படி சில தினங்கள் மட்டுமே பிறகு அந்த படத்தின் மேனேஜர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் படத்தில் ஒரு பெரிய ஹீரோயின் நடிக்க சம்மதித்திருக்கிறார். அதனால் உங்களை நீக்கிவிட்டோம் என்று சொன்னார். அவர்களை என்னால் என்ன செய்ய முடியும்? இப்படிப்பட்ட பல அவமானங்களை நான் நிறைய எதிர்கொண்டு இருக்கிறேன் என கூறினார்.

 

Trending

Exit mobile version