Thiruchitrambalam மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் வெளியிவந்துள்ள திரைப்படம்.
படத்தின் ஆரம்பமே ஒரு கார் ஒரு லாறியுடன் மோதுகிறது அதற்குள் யார் இருந்தார்கள் என்பது நமக்கு காண்பிக்கவில்லை.
தனுஷ், தாத்தா பாரதிராஜா, அப்பா பிரகாஷ்ராஜ் என ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக தனுஷ் – பிரகாஷ்ராஜ் இருவரும் 10 வருடங்களாக பேசிக்கொள்வது இல்லை.
இவர்கள் இருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் வசிப்பவர் நடிகை நித்யா மேனன் இவர்கள் இருவரும் சிறு வயதிலிந்தே தனுஷுடன் நல்ல தோழியாக இருந்து வருகிறார். சொல்லப்போனால் தனுஷை விட நித்யா மேனனுக்குதான் இவரை பற்றி நன்றாக தெரியும் என்ற அளவுக்கு தனுஷை புரிந்து வைத்துள்ளார்.
ராஷி கண்ணா மிகவும் பணக்கார வீட்டு பெண் பள்ளியில் தனுஷுடன் ஒன்றாக படித்தவர். ஒரு கட்டத்தில் ராஷி கண்ணா மீது தனுஷுக்கு காதல் வருகிறது. அந்த காதலை நிராகரித்து விட்டு செல்கிறார் ராஷி கண்ணா. அதன் பின்னார் ஊர் திருவிழாவுக்காக கிராமம் செல்லும் தனுஷுக்கு பிரியா பவானி சங்கர் மீதும் காதல் வருகிறது அந்த காதலையும் ஏற்க மறுத்து விடுகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த தாத்தா பாரதி ராஜா உனக்கு சரியான ஜோடி நித்யா மேனன் என்று கூறுகிறார். அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்சியமான நிகழ்வுகள்தான் இப்படத்தின் மீதிக்கதை.
தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவருமே நடிப்பில் மிரள வைத்து விட்டார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தனுஷை விட நித்யா மேனனின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. கண்டிப்பாக நித்யா மேனன் போன்ற ஒரு தோழி எங்கள் வாழ்வில் கிடைக்காதா என ஏங்கும் அளவிற்கு இவரின் கதாப்பாத்திரத்தை காட்டியுள்ளார் இயக்குநர். படத்தின் கிளைமாக்ஸ் முன்னர் விமானத்தில் போகும் போது இவர் அழும் ஒரு காட்சி கண்டிப்பாக அனைவரும் கலங்க வைக்கும் யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு நடிப்பை தனுஷ் மருத்துவமனையில் அடிபட்டு இருக்கும் போது வெளிக்காட்டியிருப்பார் நித்யா மேனன்.
கடந்த இரண்டு படங்களுமே தனுஷுக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி திரைப்படம். இப்படத்தின் வெற்றின் மூலம் மீண்டும் அந்த பாதைக்கு திரும்பியுள்ளார். இப்படிப்பட்ட கதைகளுடன் தனுஷை பல படங்களில் பார்த்துப்பழகிய நமக்கு இப்படமும் பிடிக்கும் என்பதை நன்றாக அறிந்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர்.
மாடர்ன் மிகவும் ஹை பை பெண்ணாக வரும் ராஷி கண்ணா தனுஷ் இவர் மீது காதலில் விழ அது காதல் இல்ல ‘பிளர்ட்’ என சொல்லி கலட்டி விட்டு செல்லும் பெண்ணாக வந்து போகிறார். பிரியா பவானி சங்கர் சிறப்பு தோற்றம் போல 5 நிமிட காட்சிகளில் வந்து போகிறார். ஒரு படத்தில் மூன்று விதமான பெண்கள் அவர்களின் வித்தியாசமான குணாதியங்கள் அவர்களுக்கு தோன்றும் காதல் என மூன்று வகையான காதலை இந்த காலத்து இளைஞர்களுக்கு காட்டியுள்ளார் இயக்குநர்.
தனுஷின் தாத்தாவாக வரும் பாரதிராஜா பேரனுக்கு வாழ்க்கையின் அடிப்படை கருத்துக்களை புரிய வைக்கும் தாத்தாவாக சிறப்பான நடிப்பு. அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜ் இவரின் நடிப்புக்கு காட்சிகள் மிகவும் குறைவுதான் இருந்தாலும் அருமையான நடிப்பு.
அனிருத் – தனுஷ் கூட்டணி என்றாலே அங்கு பாடல்கள் அனைத்துமே சும்மா பட்டையை கிளப்பும் இப்படத்திலும் அது தொடர்கிறது. ‘தாய் கிழவி’ பாடலுக்கு நடனம் ஆடதவர்கள் யாரும் இல்லை திரையரங்குகளில்.
இதுவரையில் ஆண்களின் காதலை மட்டுமே இந்த சினிமா சொல்லி வந்துள்ளது ஆனால் யாரும் அறிந்திடாத இந்த உலகம் சொல்லாத பெண்களின் காதலும் உண்டு அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மறைக்கப்பட்ட ஒரு காதலை சுவாரசியமாக ரசிக்கும் படி கலந்து சொல்லும் திரைப்படம் இந்த Thiruchitrambalam.
Thiruchitrambalam Review By Cine Timee
[wp-review id=”43651″]