News

அந்த 60 நிமிடங்களை என் வாழ்வில் மறக்க முடியாது – சிவகார்த்திகேயன் !

Published

on

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். அனிருத் இசையில் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் ₹100 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இப்படத்தை சமீபத்தில் திரையரங்கில் சென்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் அழைத்து பாராட்டினார். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் தன்னை அழ வைத்து விட்டது என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ரஜினிகாந்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தற்போது சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் இந்திய சினிமாவின் டான் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களை சந்தித்து ஆசியை பெற்றேன். அந்த 60 நிமிடமும் வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும் நன்றி தலைவா. உங்களின் அருமையான நேரதுக்கும் பாராட்டுகளுக்கும் Don என்று பதிவிட்டிருந்தார்.

Trending

Exit mobile version