Reviews

துணிவு – திரைவிமர்சனம் !

Published

on

Movie Details

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பின்னர் எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு.

சென்னையிலுள்ள யுவர்ஸ் பேங் என்ற பேங்கில் 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க உதவி கமிஷனர் அவரின் சில ஆட்களும் திட்டமிடுகின்றனர். அவர்கள் கொள்ளையடிக்க சென்ற அதே பேங்கில் சர்வதே கேங்ஸ்டர் குற்றவாளி அஜித் சென்று அந்த கொள்ளையர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

அஜித்தை பிடித்து அந்த 500 கோடி ரூபாயை காப்பாற்ற நினைக்கிரார் கமிஷர் சமுத்திரக்கனி. இதற்காக தனிப்படை அமைத்து அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஆனால் உண்மையிலேயே அந்த பேங்க்கில் கொள்ளையடிப்பது யார் என்ற உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு வெச்சம் போட்டு காட்டுகிறார் அஜித். அது என்ன உண்மை என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

எங்கும் அஜித் எதிலும் அஜித் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க நிறைந்திருக்கிறார் அஜித். ஜாலியான நடனம், சிரிப்பு, நிறுத்தி நிதானமாக பேசும் வசனம், போலீசுக்கு செக் வைப்பது, வில்லனை பழிவாங்குவது என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார்.

வெள்ளை தாடி, வெள்ளை உடை என வசீகரிக்கவும் செய்கிறது அஜித்தின் தோற்றம். காட்சியின் இயழ்பு தன்மைக்காக தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் அஜித் குமார்.

மஞ்சு வாரியர் அழுத்தமான கதாப்பாத்திரம் டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் பறந்து, குதித்து சண்டை போட்டு பட்டையை கிளப்புகிறார். சில காட்சிகளில் மட்டும் வரும் மஞ்சு வாரியருக்கு இன்னும் அழுத்தமாகவும் கூடுதல் காட்சிகளுக்கு கொடுத்திருக்கலாம்.

போலீஸ் கமுஷனராக வரும் சமுத்திரக்கனி மிக சரியான ஒரு தேர்சு. வில்லனாக வரும் ஜான் கொக்கேன் ஸ்டைலான வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

நிரூபராக வரும் மோகன சுந்தரம் யதார்த்தம் பேசி சிரிக்க வைக்கிறார். வங்கியின் மேலாளராக வரும் ஜி.எம். சுந்தர், இன்ஸ்பெக்டர் பகவதி பெருபாள், வங்கி அதிகாரி பிரேம் என பலரும் தங்களின் கடமை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் அருமை.

ஜிப்ரான் இசையிலும் சரி பின்னணி இசையிலும் சரி ஹாலிவுட் தரம். நீரவ்ஷா ஒளிப்பதிவு குறிப்பாக வங்கிக்குள் நடக்கும் சண்டைக்காட்சியாகட்டும், கடலுக்குள் சிறிப்பாயும் படகு, ஆகாயத்தில் ஒலிக்கும் குண்டு என அனைத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சாமானிய மக்களின் பணம் எப்படி கண்ணுக்கு தெரியாமல் சூறையாடபடுகிறது. எவ்வாறு பேங்க் அவர்களை ஏமாற்றுகிறது என்பதை விறுவிறுப்பாக திரைகதையில் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எச்.வினோத்.

அஜித் சொல்லும் பிளாஷ்பேக் காட்சி நமக்கு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எப்படி பல குறைகள் படத்தில் இருக்கத்தான் செய்கிறது. லாஜிக் இல்லாமல் மாஜிக் வேண்டும் என்றால் இந்த துணிவை துணிந்து பார்க்கலாம்.
Agent Kannayiram Review By CineTime

[wp-review id=”45095″]

Trending

Exit mobile version