Connect with us
 

News

ஜோதி படத்தை பாராட்டிய் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து !

Published

on

நடிகர் வெற்றி நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ஜோதி இம்மாதம் 28-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘திரௌபதி, மண்டேலா’ திரைப்படத்தின் நாயகி ஷீலா ராஜ்குமார், ‘கோலிசோடா 2’ திரைப்படத்தின் நாயகி கிரிஷா குரூப், ‘ராட்சசன்’ திரைப்படத்தின் வில்லன் நான் சரவணன் மற்றும் இளங்கோ குமரவேல், மைம்கோபி,   சாய் பிரியங்கா ருத் முக்கிய கதாப்பாத்திரத்தில் SP ராஜா சேதுபதி நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி டிக்டாக் பிரபலம் GP Muthu பார்த்து விட்டு படத்தையும் படக்குழுவினரையும் பாரட்டியுள்ளார்.

மேலும் பேசிய ஜி.பி.முத்து இன்றைய காலகட்டத்தில் இது வேதையான ஒரு படமாக இருக்கும் குழந்தைகள் கடத்தும் கும்பல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கும் இந்த சூழலில் நம் நாட்டுக்கு இப்படம் மிக தேவையான ஒரு படம் என்றும் கூறினால்.

நடிகர் வெற்றி இது போன்ற வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக இவரின் அறிமுக படம் 8 தோட்டாக்கள், ஜீவி, C/O Kaadhal படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.