Connect with us
 

Reviews

ட்ராமா – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Vivek Prasanna, Prathu, Poornima Ravi and others
Production: Turm Production House
Director: Thambithurai Mariyappan
Screenplay: Thambithurai Mariyappan
Cinematography: Ajith Srinivasan
Editing: Mugan Vel
Music: RS Rajprathap
Language: Tamil
Runtime: 1H 52Mins
Release Date: 21 March 2025

கதை களம்

நடிகர் விவேக் பிரசன்னாவின் மனைவியாக வருபவர் சாந்தினி. திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால், இருவரும் மன உளைச்சலில் இருக்கின்றனர்.இதனால் பல மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவமும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அதில் எந்த பயனும் ஏற்படவில்லை. அதே சமயம், தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றிற்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார் விவேக் பிரசன்னா. சில நாட்களிலேயே சாந்தினி கர்ப்பமாகிறார்.

இவர்களின் கதை ஒருபுறம் நடக்க, மற்றொருபுரம் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகளாக வரும் பூர்ணிமாவை ப்ரதோஷ் காதலிக்கிறார். முதலில் காதலை ஏற்க மறுத்தாலும், பின் அவர் மீது காதல் வயப்பட்டுவிடுகிறார் பூர்ணிமா. இருவரும் ஒன்றாக இருக்கின்றனர். இதனால், பூர்ணிமா கர்ப்பமாகிறார்.இந்த இரு கதைகளுக்குள் இருப்பவர்களுக்கு என்ன சம்மந்தம்.? இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது.? என்பது மீதி கதை.

படம் எப்படி இருக்கு

நடிகர் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் தனது யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அக்கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து மிக அருமையாக நடித்துள்ளார்.
இயக்குனர் கதையை மிகவும் அழகாகக் கொண்டு சென்ற இயக்குனர் தம்பிதுரை மாரியப்பனை மிக சிறந்த பாராட்டுக்கள்
மேலும் தாய்மைடைந்ததை அறிந்ததும் கண்களில் வந்த கண்ணீரால் நம் கண்ணையும் கலங்க வைத்திருக்கிறார் நடிகை சாந்தினி. குறிப்பாக முக்கியமான இடத்தில் தனது நடிப்பின் மிரட்டலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆனந்த்.

இதை தொடர்ந்து பட படவென சரவெடி போல நடித்து தெரிக்கவிட்ட பூர்ணிமா ரவியும் தனது கதாபாத்திரத்திற்கு பலம் மற்றும் வலு சேர்த்திருக்கிறார்.

இசையில் சிறப்பான பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்இசையமைப்பாளர் ஆர் எஸ் ராஜ்பிரதாப். மேலும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு சிறந்த முறையில் இருக்கிறது.

பிளஸ்:

நடிகர் & நடிகைகள். திரைக்கதை கதை. இசை

மைனஸ் :
முதல் பாதி சற்று மெதுவாக இருந்தது.

மொத்தத்தில் “ட்ராமா” – நிறைந்த ட்ராமா ஹிட் படம்.

Rating 2.5/5

 

Continue Reading