News

உண்மைச் சம்பவ கதையில் மேக்கப் இல்லாமல் நடித்த திரிஷா !

Published

on

ஏஏஏ சினிமா பிரைவேட் தயாரிக்க அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம் தி ரோட். வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தில் திரிஷாவின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ள லியோ வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுக்க திரைக்கு வரவுள்ள நிலையில் முன்னதாக தி ரோட் படம் வெளியாகவுள்ளது குறித்து திரிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

திரிஷாவுடன் இப்படத்தில் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ச், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, லட்சுமிபிரியா, சந்திரமவுலி, செம்மலர் அன்னம், வினோத் சாகர், கருப்பு நம்பியார், நேகா ஆகியோர் நடித்துள்ளனர்.

கே.ஜி.வெங்கவேஷ் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் அமைத்துள்ள இப்படம் மதுரையில் நடைபெற்ற சில உண்மைச் சம்மவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.எனவே படம் முழுவதும் திரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததுடன் அச்சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு நேரும் சென்று பார்த்து பிறவு எவ்வித சமரசமும் இல்லாமல் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா அடுத்த வாரம் சென்னையில் நடைபெறுகிறது.

 

Trending

Exit mobile version