Connect with us
 

News

லியோ படத்தின் வெற்றியால் த்ரிஷா கைவசம் குவியும் பல படங்கள் !

Published

on

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு த்ரிஷா திரை பயணம் மிண்டும் உச்சத்தை தொட்டுவிட்டது. இந்நிலையில் த்ரிஷாவை தேடி இரண்டு பெரிய பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. இது எல்லாம் வெறும் ஆரம்பம் தான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் குந்தவையாக நடித்தார் த்ரிஷா.

ரசிகர்களுக்கு குந்தவையை மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து அவரை தேடி பெரிய பட வாய்ப்புகள் வரத் துவங்கிவிட்டது.பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்து த்ரிஷா நடித்த லியோ படம் சூப்பர் ஹிட்டானது. 14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் ஜோடியாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் தான் தெலுங்கு திரையுலகில் இருந்து த்ரிஷாவை தேடி இரண்டு வாய்ப்புகள் வந்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வாம்பரா படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார்களாம். ஃபேன்டஸி த்ரில்லராக உருவாகும் அந்த படம் பெரும்பொருட் செலவில் உருவாகிறது.

இது தவிர்த்து தெலுங்கு திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் த்ரிஷாவை தேடி வந்திருக்கிறது.ஞானவேல்ராஜா தயாரிக்கும் அந்த படத்தில் நாகர்ஜுனா ஜோடியாக நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. அது பான் இந்திய படமாக உருவாகவிருக்கிறதாம்.சிரஞ்சீவி, நாகர்ஜுனா ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் அறிந்ததும் அவரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

தலைவிக்கு இது நல்ல காலம். அதனால் எல்லாமே நல்லதாக நடக்கிறது என்கிறார்கள். விடாமுயற்சியை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் ஜோடியாக தக் லைஃப் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. அந்த படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். இதையடுத்து அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக ஆகியிருக்கிறார் த்ரிஷா.