Connect with us
 

News

தளபதி என்றாலே முதலிடம்தான் டுவிட்டரின் அதிரடி அறிவிப்பு !

Published

on

தற்போது 2021ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் இந்த வருடத்தின் டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர்களின் பட்டியல் துறை வாரியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஹேஷ்டேக்குகளும் உருவாக்கப்பட்டு வைராலாகின்றன

அரசியல், சினிமா , பிரபலங்கள், திரைப்படங்கள் குறித்த அனைத்து லேட்டஸ்ட் அறிவிப்புக்களும் ட்விட்டர் மூலமே வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்கில் கொரோனா முதலிடத்தை பிடித்துள்ளது. அதே போல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட முதல் 10 இடங்களில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் இருக்கிறது.

விஜய்யின் ’பீஸ்ட்’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக முறை ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் நடிகர் சோனு சூட் நடிகைகளில் ஆலியா பட் முதலிடத்தை பிடித்துள்ளனர்.