News
இரண்டு நாட்களுக்குள் முழு வரியையும் கட்ட வேண்டும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுவைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது தனுஷ் ஆஜரான வழக்கணிஞர் தனது வாதத்தில் தனுஷ் ஏற்கனவே 50% சதவீதம் வரியை செலுத்திவிட்டதாகவும் மீதி வரியை செலுத்த தயாராகவிருப்பதாகவும் எனவே இந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.
தனுஷ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சரமாரியான கேள்விகளை கேட்டதோடு மனுதாரர் கட்டவேண்டிய மீதி வரித்தொகையை கணக்கிட்டு கூறவேண்டும் என தமிழக வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தனுஷ் மீதி செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி ரூபாய்.30.30 லட்சம் என வணிகவரித்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் கூறினர். இதனையடித்து இந்த மீதி தொகையை தனுஷ் இன்னும் இரண்டு நாட்களுக்குள் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.