News

விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசாவை வழங்கியது ஐக்கிய அரபு எமிரேட் !

Published

on

தமிழ் நடிகர் மற்றும் நடிகைகள் உள்பட இந்திய திரைப்பட உலகினருக்கு ஜக்கிய எமிரேட் நாட்டின் கோல்டன் விசா வழங்கி வருகிறது அந்த நாடு.

அந்த வரிசையில் ஆர்.பார்த்திபன், திரிஷா, அமலாபால் ஆகியோருக்க்கு வழங்கியது. தற்போது நடிகர் விஜய் சேதுபதுக்கும் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

இன்று துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டார் விஜய்சேதுபதி. 22 ஆண்டுகளுக்கு முன் இதே துபாயில் நான் சாதாரண ஊழியராக வேலை செய்தேன் என்றும் இன்று இந்த நாட்டின் கெளரவத்தை பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் விஜய்சேதுபதி.

Trending

Exit mobile version