Reviews
இந்தியன் 2 – திரைவிமர்சனம் !
Cast: Kamal Haasan, Sidharth, Kajal Agarwal, Rakul Preet Singh, SJ Surya, Bobby Simha, Vivek, Priya Bhavani Shankar, Brahmanandam, Samuthirakani, Nedumudi Venu, Delhi Ganesh, Manobala, Jagan, Kalidas Jayaram, Gulshan Grover, Zakir Hussain, Piyush Mishra, Akhilendra Mishra
Production: Lyca Productions
Director: Shankar
Screenplay: Jayamohan – Kabilan Vairamuthu – Lakshmi Saravana Kumar
Cinematography: Ravi Varman
Editing: Sreekar Prasad
Music: Anirudh Ravichander
Language: Tamil
Runtime: 3H
Release Date: 12/July/2024
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இபப்டத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது இந்தியன் 2.
முதல் பாகத்தில் தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் அதற்கு காரணமானவர்களை இந்தியன் தாத்தா வெளிச்சம் போட்டு உலகத்திற்கு காட்டி அவர்களை கொலையும் செய்வார். இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுவதும் நடக்கும் ஊழல்கள் அதற்கு காரணமானவர்களை இந்தியன் தாத்தாவான சேனாபதி தண்டித்து கொலையும் செய்கிறார்.
நடிகர் சித்தார்த், பிரியா பவானி சங்கர் இவர்களின் நண்பர்கள் என 4 பேர் சேர்ந்து பார்க்கிங் டாக்ஸ் என்ற YouTube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதில் அவர்களின் ஊரில் நடக்கும். அவலங்களையும் ஊழல்களையும் மக்களுக்கு சொல்வது இவர்களின் சேனல் வேலை. என்னதான் சொன்னாலும் ஊழல் மட்டும் நாட்டில் ஒழியுதே இல்லை என்று ஒரு கட்டத்தில் கோவப்படுகிறார் சித்தார்த். இந்த ஊழல் வாதிகளை ஒழிக்க இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்தான் சரியாகும் என நினைத்து. சமூக வலைத்தளங்களில் Come Back Indian என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்கிறார். இதை பார்த்த இந்தியன் தாத்தா பேஸ்புக் லைவ்வில் வந்து நாட்டை திருத்த முதல் உங்களின் வீட்டை சுத்தப்படுத்துங்கள் என சொல்லிவிட்டு செல்கிறார். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒரு தங்க கோடீஸ்வரனையும், உயர் அதிகாரி ஒருவனையும் வர்மம் காளை மூலம் கொலை செய்கிறார் இந்தியன் தாத்தா.
இதற்கிடையில் இந்தியன் தாத்தா சொன்னது போல தங்களின் வீட்டை முதலில் சுத்தம் செய்ய முயற்கிறார்கள் சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் அவர்களின் நண்பர்கள். இதன் விளைவாக ஒரு பெரும் இழப்பு நடக்கிறது சித்தார்த் வீட்டில் இதனால் ஆத்திரம் அடையும் சித்தார்த் இந்தியன் தாத்தாவை நீ வேண்டாம் இனி Go Back என சொல்கிறார். இதற்கிடையில் இந்தியன் தாத்தாவை சுற்றி வளைக்கிறது சிபிஜ அதிகாரிகள் மற்றும் பாபி சிம்ஹா இதன் பின்னர் என்ன நடந்து என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் முதல் பாகத்தில் அவரின் ஹீரோயிசம் அம்சமாக இருக்கும் அது இதில் மொத்தமாக மிஸ் ஆகிறது. 70 வயதான தாத்தா 20 வயது இளைஞன் செய்யும் அனைத்தையும் செய்கிறார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வழங்கி அதே போல படத்திலும் பேசுகிறார் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என. படம் முழுவதும் இந்தியன் தாத்தா நிறையவே பேசுகிறார். படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கான முன்னோட்டக் காட்சிகள் காட்டப்படுகிறது நிச்சயமாக அது இந்தியன் 3 பாகத்திற்கான எதிர்பார்ப்பை நமக்கு அதிகப்படுத்தி விட்டது.
YouTube சேனல் நடத்தும் துடிப்பான ஒரு இளைஞனாக சித்தார்த் இந்த சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு கதாப்பாத்திரம் ஊழல் யார் செய்தாலும் தண்டனை அனுபவித்து ஆகவே வேண்டும் என் அப்பாவாக இருந்தாலும் என நினைக்கும் இளைஞன் அதனால் அவருக்கு ஏற்படும் பேரிழப்பு. அவரை போல அவரது தோழி பிரியா பவானி சங்கர், ஜெகன் என அனைவரும் வீட்டை சுத்தம் செய்ய பொய் தனித்து அனாதையாக நிற்கிறார்கள். நடிகை ரகுல் பிரீத் சிங் சித்தார்த் காதலியாக ஒரு சில நிமிடங்கள் வந்து போகிறார்.
சிபிஜ அதிகாரியாக வரும் பாபி சிம்ஹா – விவேக் அந்நியன் பிரகாஷ்ராஜ் – விவேக் கூட்டணியை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இவர்களை தவிர காளிதாஸ், சமுத்திரக்கனி, தம்பி ராமையா, மனோ பாலா, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், குல்ஷன் குரோவர், ரேணுகா என பலர் திரையில் தோன்றி மறைகிறார்கள். குறிப்பாக எஸ்.ஜே சூர்யா ஒரு சில காட்சிகள் மட்டுமே இந்தியன் 3 படத்தில் இவர்தான் மிகப்பெரிய வில்லன்.
ரவிமர்மனின் ஒளிப்பதிவும், விஎப் எக்ஸ் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அனிருத் இசை தாத்தா வராரு பாடலை தவிர மற்றவை பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை ஏ.ஆர்.ரஹ்மான் இசையை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம்.
ஒட்டு மொத்தத்தில் இந்தியன் 2 இந்தியன் 3 படத்திற்காக ரோடு.
Rating 3.5/5