News

மற்ற போலீஸ் படங்கள் போல் இல்லாமல் சினம் சற்று மாறுபட்ட கதை !

Published

on

அருண் விஜய் சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஒரு வெற்றி நாயகன். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் சினம்.

இது பற்றி அருண் விஜய் கூறியதாவது:-

சினம் யதார்த்தமான ஒரு போலீஸ் திரைப்படம். வழக்கமான போலீஸ் கதைகலிருந்து இது சற்று மாறுபட்ட கதை. குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு போலீஸ் கதை.

நம் நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய பிரச்சனைதான் இந்த கதையின் கரு. இப்படத்தில் பாரிவெங்கட் எனும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன் என்னுடைய கதாப்பாத்திரம் மிக யதார்த்தமாக கையாளப்பட்டிருக்கும் இப்படத்தின் தலைப்புக்கு ஏற்ற போல பொருத்தமானதாக இருக்கும். படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார்.

கோபிநாத் மிகச்சிறந்த ஒரு ஒளிப்பதிவாளர் இப்படத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரைக்கதை எழுது இருக்கிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன்.

Trending

Exit mobile version