Connect with us
 

News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி !

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி!! கெத்து காட்டும் விஜய் மக்கள் இயக்கம்!! பரபரக்கும் அரசியல்!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் என 12,838 வார்டுகளில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது.

ஜனநாயக கடமையாற்றியதும் வெளிநாட்டுக்கு பறந்த நடிகர் விஜய் அதே போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி என இதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இளைய தளபதி விஜய்யின் உத்தரவுப்படி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடும். இந்த தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்களுக்கு அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒன்றாக இணைந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை வெற்றிபெற செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.