News
ரஜினி நடிக்கும் 170-வது படத்தில் இணையும் வடிவேலு !

நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் இப்படத்தை ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ரஜினியின் 170-வது படமாமும்.
இப்படத்தில் அரவிந்த சாமி முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 1991-ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் ரஜினியின் தப்பியாக நடித்திருந்த அரவிந்த சாமி அதன் பின்னர் 30 வருடங்களுக்கு கழித்து இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.
இந்த நிலையில் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. டான் படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக இருந்ததால்தான் அப்படம் நன்றாக இருந்தது அதனால் ரஜினி நடிக்கும் இப்படத்தில் நகைச்சுவை அதை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
வடிவேலு – ரஜினி இருவரும் இதற்கு முன்னர் சந்திரமுகி, குசேலன், ஆகிய படங்களில் நடித்துள்ளர். அந்த காமெடி காட்சிகள் இன்றும் அழியாமல் இருக்கிறது. தற்போது 14 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரஜினி படத்தில் வடிவேலு இணையவுள்ளதாக கூறப்படுகிறது.