Connect with us
 

News

மீண்டும் ஒரு முறை மோதும் தல மற்றும் தளபதி !

Published

on

அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை இப்படத்தை பிரபல இந்தி தயாரிப்பாளார் போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

வலிமை எப்போது திரையரங்கில் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கள் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

இந்த அதிகாரபூர்வ அறிவிப்பின் படை வலிமை தீபாவளி போட்டியிலிருந்து இப்படம் விலகி உள்ளது. அதே சமயம் 2022 பொங்கள் திருநாளில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படமும் வெளியாகவுள்ளது. இதன் மூலம் அஜித் படமும் விஜய் படமும் மீண்டும் ஒரு முறை மோதுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.