News

வலிமை படத்தின் தள்ளி வைப்பு வரிசை கட்டும் சிறிய படங்கள் !

Published

on

அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் பொங்களுக்கு திரைக்கு வரவிருந்த திரைப்படம் வலிமை. பொங்களுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது இதனால் பல திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வலிமை வெளியீடு ஒத்திவைப்பால் தற்போது ஒரு சில திரைப்படங்கள் தற்போது பொங்கள் தினத்திற்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதில் கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், என்ன சொல்ல போகிறாய், ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாகவும் அதே போல் விஷால் நடித்த வீரமே வாகை சூடும் போன்ற திரைப்படங்கள் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திங்கள் முதல் வியாழன் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் இந்த படங்கள் வெளியாகும் என்றும் மிகச்சிறிய பட்ஜெட் படங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதால் வெளியீட்டு தேதியை நாளை அறிவிக்கருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version