Reviews

Valimai – Movie Review

Published

on

யக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் இயக்கத்தில் சுமார் 3 வருடமாக உருவாகி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகிருக்கும் திரைப்படம் வலிமை.

Movie Details

மதுரைரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் படத்தின் நாயகனாக அஜித் இப்படத்தில் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொலம்பியாவிலிருந்து கடல் வலியாக பாண்டிச்சேருக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது. அதை சென்னை கொண்டு செல்லும் வழியில் அவர்களிடமிருந்து அதை இளைஞர்களை வைத்து கொள்ளையடிக்கிறார் வில்லன் கார்த்திகேயா. வெறும் போதைப்பொருள் மட்டுமல்ல செயின் பறிப்பு, கொலை என அனைத்தையும் செய்து வருகிறார்கள் கார்த்திகேயாவின் கும்பல்.

இதே சம்யம் மதுரையில் இருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு வருகிறார் அஜித் குமார். ஒர் விடுதியில் இருக்கும் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் அஜித் குமார் அவை எல்லாத்துக்கு காரணம் யார் என்று கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் ஒட்டு மொத்தக்கதையும்.

அதிரடியான உதவி கமிஷனராக வரும் அஜித் குமார் இவர் தோன்றும் ஒரு ஒரு காட்சிகளுக்கு விசில் சத்தம் அரங்கை அதிர வைக்கிறது. இப்படத்தில் சற்று புதிதாக அஜித் குமார் கூடுதல் பஞ்ச் வசனம் பேசுதல் அட்வைஸ் செய்யுதல் என அசத்தியுள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்தில் அஜித் குமார் ஆக்‌ஷன் காட்சிகளில் தெறிக்க வைக்கிறார் ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்து விடுகிறார்கள். அந்த சண்டைக்காட்சிகள் எல்லாமெ அவரின் ரசிகர்களுக்கு மட்டுமே செய்துள்ளார்.

படத்தில் அஜித்துடனே வரும் ஹூமா குரேஷி கண்டிப்பாக கதாநாயகி என்று சொல்ல முடியாது. போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணி புரியும் ஒரு முக்கிய அதிகாரி இவர். என்ன ஒரு ஆறுதல் என்றால் இவர்களுக்கு டூயட் பாடல்கள் இல்லை என்பதுதான்.

ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள் மட்டும் இருந்தால் அஜித் ரசிகர்களை மட்டும்தான் திருப்திப்படுத்த முடியும் என்று குடும்ப சென்டிமென்ட் கொஞ்சம் வைத்திருக்கிறார்கள்.
Cinetimee

படத்தின் வில்லனாக வரும் கார்த்திகேய நாயகன் அஜித் குமாருக்கு என்ன முக்கியத்துவமோ அதே அளவிற்கு கார்த்திகேயாவுக்கும் முக்கியத்தும் உள்ள காட்சி. இவரின் அறிமுக காட்சியே மிரட்டளாக உள்ள இவரின் சிக்ஸ் பேக்கை காட்டிய பின்புதான் நமக்கு இவரின் முகத்தின் அறிமுகத்தையே கொடுக்கிறார்கள். அஜித்தின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார். இப்படிப்பட்ட மிரட்டும் வில்லன்கள் தமிழ் சினிமாவில் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான்.

படத்தில் எந்த அளவிற்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கோ அதே அளவு சென்டிமெனட் காட்சிகளும் உள்ளது. அஜித்தின் அம்மா, அண்ணன், தம்பி என அனைவரும் உள்ளனர். தம்பி படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார். இதனால் இவரை அனைவருமே அவமானப்படுத்திருகிறார். அந்த நொடியே நமக்கு தெரிந்து விடுகிறது கண்டிப்பாக இவர் வில்லன் கூட்டத்தில் இணைந்து விடுவார் என்று.

படத்தில் பல காட்சிகள் பார்த்து பழகி புளித்து போன காட்சிகளும் ஈஸியாக அடுத்த காட்சிகளை யூகிக்க கூடிய காட்சிகளும் படத்தின் மிகப்பெரிய பலவீனம். டாப் வேகத்தில் போகும் வண்டிக்கு வேக தடை வருவது போல படத்தில் வரும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளுக்கும் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

இப்படத்தின் பின்னணி இசை யார் அமைந்தார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை காரணம் படத்தின் முடிவில் இசை யுவன் என்றும் நன்றி ஜிப்ரான் என்றும் வருகிறது உண்மையில் யார் பின்னணி இசை அமைத்தது என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

சித் ஶ்ரீராம் பாடிய அம்மா பாடல் படத்தின் முடிவில் போட்டு விடுகிறார்கள். அப்படி என்றால் படத்தின் இடையில் வரும் அம்மா பாடலுக்கு இசையமைத்தது ஜிப்ரானா அதுவும் ஒரு குழப்பமாகவே உள்ளது.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா அவர்களின் ஒளிப்பதிவு படத்தின் அடுத்த பலம். அதுவும் அந்த பைக் சண்டைக்காட்சிகளை அவர் படமாக்கிய விதம் அருமை. தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி பட்ட ஒரு சண்டைக்காட்சிகளை நாம் பார்த்திருக்கவே மாட்டோம் தரமான சம்பவம் வாழ்த்துக்கள் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராஜன்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் போகிறது. அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தை நமக்கு வரவைக்கிறது. இதே ஆர்வம் மிரட்டல் இரண்டாம் பாதியிலும் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது நமக்கு ஏமாற்றம். வழக்கமான தமிழ் படங்களை போலவே உள்ளது அதாவது முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாது சொதப்பலாகவும்.


மொத்தத்தில் வலிமை முதல் பாதியில் நமக்கு வலிமையை கொடுத்து இரண்டாம் பதியில் அந்த வலிமை சோதித்து பார்க்கிறது !

Trending

Exit mobile version