Connect with us
 

News

கோமாளி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வலிமை தயாரிப்பாளர் !

Published

on

அஜித் குமார் நடிகை ஹூமா குரேசி நடிக்கும் வலிமை படத்தை தயாரிக்கும் போனி கபூர். அடுத்து கனா அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷிவானி ராஜசேகர். தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார்.

இதையடுத்து இந்தியில் இவர் ரீமேக் செய்ய வாங்கியுள்ள படம் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெயம் ரவி நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடித்திருந்தனர்.

இப்படத்தை ஹிந்தி ரீமேக் செய்யவுள்ளார் போனி கபூர் இதில் ஜெயம் ரவி நடித்திருந்த வேடத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கவிருக்கிறார். இவர் போனி கபூர் அவர்களின் சொந்த மகனாகும்.