News

நாளை முதல் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா வலிமை !

Published

on

அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வலிமை. இயக்குநர் எச்.வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் நாலை ஜி தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் குஷியில் இருக்கிறார்கள் இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் ஒரு மாதம் கழித்துதான் ஓடிடி தளத்தில் வெளியாக வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை. ஆனால் வலிமை திரைப்படம் வெளியாகி 24 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version