News
வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் தரமான சம்பவமாக இருக்கும் – எச் வினோத் !

அஜித் குமார் ரசிகர்கள் மிக ஆவலுடன் ஒன்றரை ஆண்டுகளுகாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. படத்தின் கொண்டாட்டம் விரைவில் நடைபெறும் என்று இயக்குனர் எச்.வினோத் கூறினார்.
வலிமை படத்தை பற்றி புதிய தகவல்கள் எதையும் கசியவிடாமல் இருப்பது ஏன் என்று கேட்டு தன்னையும், தயாரிப்பாளரான போனி கபூரையும் விடாமல் ரசிகர்கள் துரத்திக்கொண்டிருக்கிறார்கள் ஆதங்கபடுகிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக படத்தின் இசையை பற்றி இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கிறது.
கோடம்பாக்கத்தில் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திக்கொண்டிருந்த வலிமை படத்தின் கொண்டாட்டம் விரைவில் நடைபெறும். இந்த படத்துக்கு ஆதரவு கொடுப்பவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் விரைவில் வெளியிடுவார். அந்த சம்பவம் தரமாக இருக்கும் கவலை வேண்டாம் என்றும் இயக்குனர் எச்.வினோத் கூறியுள்ளார்.
ஏதோ நல்லதா சிறப்பானதாக சீக்கிரமே கொடுத்தால் கொண்டாடுவோம் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.